Aran Sei

சித்திக் காப்பான் மரணமடைய நேரிடும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சித்திக்கின் மனைவி

credits : the new indian express

”மருத்துவமனையில் ஒரு விலங்கைப் போல கட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சித்திக் காப்பானை, விடுவிக்க வேண்டும்” என, அவரின் மனைவி ராய்ஹாந்த் காப்பான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் காப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி கைது செய்தனர்.

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் செயல்பட்டதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்கு பதிவு செய்தது.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

மதுரா சிறையில் அடைக்கப்பட்ட சித்திக் காப்பான் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, சிறை கழிவறையில் வழுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஊபா சட்டத்தில் சித்திக் கப்பான் : 5000 பக்க குற்றப்பத்திரிகை சட்டப்படி செல்லாது என வாதம்

இந்நிலையில், ராய்ஹாந்த் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”மருத்துவமனை கட்டிலில் ஒரு விலங்கைப் போல கட்டி வைக்கப்பட்டுள்ளார். அவரால் எங்கும் நகர முடியவில்லை. சுயமாக உணவருந்த முடியவில்லை. கடந்த நான்கு நாட்களாக அவரால் கழிவறைக்கு கூடச் செல்ல முடியவில்லை. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

“அவருக்கு உரிய நேரத்தில் முறையான பரிசோதனை செய்யப்படாவிடில், அவர் மரணமடைய கூட நேரிடும்” என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

மேலும், ”சித்திக் காப்பான் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படாமல் கடந்த ஆறு மாதமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதால் தான், இந்த விவகாரத்தை சட்டரீதியாக அனுகாமால் நேரடியாக உங்களுக்கு ( உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ) கடிதமாக எழுதுகிறேன். நீதியே அனைத்துக்கும் மேலானது. நீதி கிடைக்க சட்டம், விதி, வழிமுறை என அனைத்தும் வளைக்கபடலாம்” என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சித்திக் கப்பான் உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை – அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

”மிக முக்கியமாக, ஜனநாயகத்தின் உயிர்நாடியே ஊடகம் தான். இது கடந்த ஆறு மாதகாலமாக சிறையில் அடைபட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளருக்கு உயிர்நாடியை கொடுக்கும் வாய்ப்பு” என்றும் சித்திக்கின் மனைவி கடிதத்தில் கூறியுள்ளார்.

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

எனவே இடைக்கால நடவடிக்கையாக சித்திக் காப்பானை உடனடியாக மருத்துவமனையிலிருந்து மதுரா சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு, சித்திக் காப்பானின் மனைவி ராய்ஹாந்த் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்