ஊடகலவியளாலர் மீதான வழக்குப்பதிவின் தொடர்ச்சியாகத் தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகத் தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்த கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்காக, உத்திரபிரதேச மாநிலத்தின் ராம்பூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், 153 பிரிவு (குற்றம் சுமத்துல், தேசிய ஒருங்கிணைப்புக்கு கேடு விளைவிக்கும் செயல்கள்), பிரிவு 505 (2) பிரிவு (பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்) ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hardeep Singh Dibdiba, grandfather of the youth killed in tractor parade, levels a sensational charge—that a doctor who was part of the autopsy told him a bullet caused the injuries “but my hands are tied”. @IsmatAraa has the story https://t.co/ulMIDPbLPq via @thewire_in
— Siddharth (@svaradarajan) January 30, 2021
தி வயர் இணையதளம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 29), வெளியிட்டு இருந்த செய்தியில் டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் தாத்தாவின் உடலில் குண்டு காயங்கள் இருந்ததாக அவர் குடும்பத்தினரிடம் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்ததாகவும், ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் நவ்ரீத் சிங்கின் மரணம் விபத்து என வந்திருப்பதாகக் அவர் குடும்பம் குற்றம் சாட்டியதாகத் தெரிவித்து இருந்தது.
அந்தச் செய்தியில், குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளை மறுத்த காவல்துறை மற்றும் மருத்துவத்துறையின் அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருந்தன.
பரேலியின் காவல்துறை கூடுதல் இயக்குனர் அவனாஷ் சந்திரா கூறுகையில், பிரேதப் பரிசோதனை மூத்த மருத்துவர்கள் கொண்டே நடத்தப்பட்டது என்றும் சம்பவம் டெல்லி காவல்துறை தொடர்பானது தான் என்பதால், உண்மையை மறைப்பதற்கோ, சிதைப்பதற்கோ அவசியமில்லையெனக் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
”ஊடகவியலாளர்கள் மற்றும் தனி நபர்கள் எந்த ஒரு முடிவையும் எட்டுவது சாத்தியமற்றது என்றாலும், சுயாதீன விசாரணைமூலம் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென நவ்ரீத் சிங்கின் குடும்பம் வேண்டுகிறது” என தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த சித்தார்த், “பிரேதப் பரிசோதனை அறிக்கை அல்லது மரணம் தொடர்பாகக் காவல்துறை தரப்பின் பதில்கள்மீது மரணமடைந்தவர்கள் குடும்பம் எழுப்பும் கேள்விகளைப் பதிவு செய்வது உத்திரபிரதேச மாநிலத்தில் குற்றமாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
In UP, it is a crime for media to report statements of relatives of a dead person if they question a postmortem or police version of cause of death.
I think this new ‘law’ has come in the wake of godi media coverage of Sushant Singh Rajput postmortem.
. https://t.co/ulMIDPtmGY— Siddharth (@svaradarajan) January 31, 2021
சித்தார்த் வரதராஜன் மீது உத்திரப்பிரதேசக் காவல்துறை நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறை, இதற்கு முன்பாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அயோத்தி நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.