Aran Sei

‘யார் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ – பிரபலங்களுக்கு சித்தார்த் கேள்வி

credits : cinema express

துவரை எந்த ஒரு நிகழ்வுக்கும் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்காத பிரபலங்கள் யாருக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என நடிகர் சித்தார்த் கேள்வியேழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா, ஜேமி மார்கன், மீனா ஹாரிஸ், லிசி கங்குஜம், வனேசா நகாடே உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய அரசு விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

”இது போன்ற விஷயங்களில் விரைந்து கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகள்குறித்து சரியான புரிதல் வேண்டும்” எனவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில், பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ”துல்லியமானதாகவோ” அல்லது ”பொறுப்பானதாகவோ” இல்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கொடியுடன் இருக்கும் ரிஹன்னா புகைப்படம் – உண்மைத்தன்மை என்ன?

இதையடுத்து, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா பிரச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது எனும் ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

மேலும், இதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய் குமார், பாடகர் லதா மங்கேஷ்கர் போன்றோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளனர்.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தன்னுடையை ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய கதாநாயகர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள் அல்லது நீங்கள் வைத்திருக்கும் அபிமானத்திலிருந்து அவர்கள் வீழ்வதை பார்ப்பீர்கள். கல்வி, நேர்மை, சக மனிதர்மீதான அன்பு, கொஞ்சம் முதுகெலும்பு இருந்திருந்தால் இந்த நாளைக் காப்பாற்றியிருக்கலாம். பேரிழப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், எந்த ஒரு நிகழ்விலும் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்காத அதிகாரமிக்க நபர்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்த கருத்தை ஒருமித்த குரலில் ஒப்பிப்பது தான், உண்மையில் பிரச்சாரம் எனப் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், உங்களுடைய பிரச்சாரம் என்ன என்பதை முடிவு செய்யுங்கள் என ட்விட் செய்துள்ளார்.

சித்தார்த்துக்கு முன்னதாக நடிகை டாப்சி “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால், நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்