Aran Sei

”உங்கள் முகத்தைத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சியில் காட்டுவதால் கொரோனா ஒழியாது” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கண்டனம்

”உங்கள் முகத்தைத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சியில் காட்டுவதன் மூலம் கொரோனா ஒழியாது” என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எந்தவொரு நோக்கமும் இல்லாமல் நீங்கள் (மோடி) மீண்டும், மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றுவதால், கொரோனா ஒழியாது. மாநில முதலமைச்சர்களுக்கு பாடம் நடத்தும் அளவிற்கு நீங்கள் ஒன்றும் தலையாசிரியர் இல்லை. முதலில், மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து உங்கள் பொறுப்பைக் காட்டுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் உயிரிழந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கும் சித்தராமையா, “மாநிலங்கள் ஆக்சிஜன் வழங்கப் பிரதமர் மோடியிடம் கோரினால், அவர் பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என கூறுகிறார். தேவை அதிகமாக இருக்கும்போது ஆக்சிஜன் ஏற்றுமதியை ஏன் அதிகரிக்க வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்