Aran Sei

‘கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பதில் ஆட்சேபனை இல்லை’ -எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

ள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவத் கீதையை அறிமுகப்படுத்தும் கர்நாடக மாநில பாஜக அரசின் திட்டத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 19), மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சித்தராமையா, “பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் குரான் மற்றும் பைபிளையும் பாடத்திட்டத்தில் சேர்த்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  இருப்பினும், பள்ளிகளில் கல்வியின் தரம் நன்றாக இருக்க வேண்டும். போட்டி நிறைந்த இவ்வுலகில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குழந்தைகள் அறிவைப் பெற கல்வியின் தரம் உதவும்” என்று கூறியுள்ளார்.

கர்நாடக பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – குஜராத்தை தொடர்ந்து கர்நாடக அரசும் அறிவிப்பு

“குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு ‘பகவத் கீதை’, ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்றவற்றைக் கற்றுத் தருகிறார்கள். பள்ளிகளிலும் அறநெறிக் கல்வி தேவை. ஆனால், அது அரசியலமைப்புக்கு எதிராக இருக்கக்கூடாது. நம் நாடு பன்முகத்தன்மையை ஏற்கும் சமூகம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியானது மென்மையான அல்லது தீவிரமான இந்துத்துவ கட்சி அல்ல. எனக்கு இந்து மதத்தின்மீது நம்பிக்கை உள்ளது. அதே சமயம் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை நான் தருகிறேன்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Source: Times of India

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்