Aran Sei

‘இந்திரா காந்தி ஏழைகளுக்காக திறந்த வங்கிகளை பாஜக மூடுகிறது’ – சித்தராமையா

ர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ‘பாஜக ஹடாவோ’(பாஜக ஒழிக) என்ற பரப்புரையை அம்மாநிலத்தில் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வரலாற்றையும் நாட்டிற்கு அக்கட்சிகள் செய்த பங்களிப்பை குறித்தும் மக்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று(டிசம்பர் 28), காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசியுள்ள சித்தராமையா, “பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத கொள்கைகளாலேயே வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘15 லட்சம் என்றால் மட்டும் புகார் செய்யுங்கள்’ – ஊழல் புகார் செய்ய புதிய வரையறை கொடுத்த பாஜக அமைச்சர்

“காங்கிரஸ் சித்தாந்தம் மக்களுக்கானது. அதேசமயம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மக்கள் விரோதமானது. அரசியலமைப்பிற்கு எதிரானது. சமத்துவமின்மையை வளர்ப்பது என்ற வேலைத்திட்டத்தை கொண்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் பங்களிக்கவில்லை. ஆனால், இப்போது தேசபக்தியை குறித்தும் வரலாற்றைக் குறித்தும் நமக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

எவை எல்லாம் வரதட்சணை மரணங்கள்? – புதிய விளக்கமளித்த உச்ச நீதிமன்றம்

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஏழைகளுக்காக வங்கிகளைத் திறந்தார். ஆனால், பாஜக அவற்றுக்கு மூடு விழா நடத்த விரும்புகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற அவசர முடிவுகளை எடுத்தது, நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்