Aran Sei

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: கோயிலில் இஸ்லாமியர்கள் கடை போட்டால் இந்துக்கள் எவ்வாறு உணர்வார்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கேள்வி

ர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் இஸ்லாமிய வியாபாரிகளின் தர்பூசணி தள்ளு வண்டிக் கடைகளை ஸ்ரீராம சேனை என்ற இந்துத்துவா வலதுசாரி அமைப்பினர் அடித்து நொறுக்கிய விவகாரம் பற்றி கேள்வி கேட்டதற்குப் பதில் அளித்த கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லாட் இது ஒரு இந்துக் கோயில் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகளின் பழக் கடைகளைச் சேதப்படுத்திய வலதுசாரிகள் – காவல்துறை வழக்கு பதிவு

“இது இந்துக் கோயில். இஸ்லாமிய வியாபாரிகள் இங்குக் கடை போட்டால் என்ன அவர்கள் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும். மீசை இல்லாமல், தாடி வைத்துக் கொண்டு, தொப்பி போட்டுக் கொண்டு பைஜாமா ஆடையுடன் அங்கு இருந்தால் கோயிலுக்கு வரும் இந்து பக்தர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வியாபாரிகளின் தர்பூசணி தள்ளுவண்டிகள் அடித்து உடைத்தது தாக்குதல் நடத்திய ஸ்ரீராம சேனை அமைப்பை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: ‘கன்னடர்களை பாஜக தலைகுனிய வைக்கிறது’ – சித்தராமையா

“ஸ்ரீராம சேனை உறுப்பினர்களின் தாக்குதல் இஸ்லாமிய வியாபாரிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் மீதான தாக்குதலும் கூட. கர்நாடகம் மாநிலமானது பொது அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்றது. கன்னடர்கள் அதில் பெருமை கொள்கிறார்கள். சங்பரிவாரும் பாஜகவும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் உள்ள கன்னடர்களை தலைகுனிய வைத்துள்ளது” என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

‘இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்’ – எடியூரப்பா

“கர்நாடகாவில் உள்ள அனைத்து சமூகமும் அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும். ஒரே தாய்க்குப் பிறந்த சகோதரர்களான இந்துக்களும் இஸ்லாமியர்களும் இடையே ஒரு பந்தம் இருக்கிறது. அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ விரும்பும் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சில குண்டர்கள் பிளவுபடுத்த முயல்கிறார்கள். இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்” என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

Source : NDTV

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துணிச்சல் மிக்க தமிழன்..  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சங்கத்தமிழன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்