Aran Sei

தடுப்பூசி பற்றாக்குறை: ”நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா?” – கடுப்பான அமைச்சர்

credits : outlook

தொடர்ந்து தடுப்பூசி தொடர்பாக கேள்விகள் எழுந்து வரும் நிலையில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளால் எரிச்சலடைந்த மத்திய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா “ தடுப்பூசி தட்டுப்பாடு என்றால், நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா?” என்று ஆவேசப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,46,809 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,62,317 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 4000 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 2,00,79,599 பேர் நோயிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா கிருமி ஒரு உயிர்; நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு’ – உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் கருத்து

தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடு தொடர்பாக, உச்ச நீதிமன்றம், டெல்லி, அலகாபாத், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் மத்திய அரசை தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கங்கையில் மிதக்கும் சடலங்கள் : ஒன்றிய அரசுக்கும், உ.பி, பீகாருக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா, நீதிமன்றம்,  நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, இந்த கேள்விகளை முன்வைத்துள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்,  ஒரு வேளை, நாளையே இவ்வளவு (நிறைய) தடுப்பூசிகள் வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, அவ்வளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாவிடில், நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனா எதிரொலி: புதிய சட்டமன்றம் கட்டும் பணி உடனடியாக நிறுத்தம் – சத்தீஸ்கர் அரசு உத்தரவு

”பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், மத்திய அரசு தன்னுடைய வேலையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்து வருகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

மேலும், ”நடைமுறையில் சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி உள்ளது, அவற்றை எவ்வாறு நம்மால் கட்டுப்படுத்த முடியும்?” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வேலையை அரசாங்கம் செய்து கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

SOURCE : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்