Aran Sei

ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

credits : PTI

ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை மீது,  லக்னோ காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின், லக்னோ மாவட்டத்தில், ஒரு தனியார் மருத்துவமனை (சன் மருத்துவமனை) செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் மையமாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மே 3 ஆம் தேதி, மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக நோட்டீஸ் ஒன்றை மருத்துவமனை வளாகத்தில் ஒட்டியதுடன், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

அதைத்தொடர்ந்து, அன்று இரவே, சன் மருத்துவமனைக்கு எதிராக, லக்னோ மாவட்ட நிர்வாகம், காவல்துறையில் புகாரளித்துள்ளது. அந்தப் புகாரில், ”ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தவறான தகவல்களை பரப்பக் கூடாது என அரசாங்கமும், லக்னோ மாவட்ட நிர்வாகமும் பலமுறை வலியுறுத்தியும், சன் மருத்துவமனை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதாக கூறி நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. சன் மருத்துவமனையை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ததில், அங்கு போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தது. சன் மருத்துவமனை தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

‘ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக முன்பே எச்சரிக்கப்பட்டது; மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை’ – சுப்பிரமணியன் சுவாமி

இந்த புகாரின் அடிப்படையில், லக்னோ காவல்துறை, மருத்துவமனை நிர்வாகத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 188, 269, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவுகள் 51 மற்றும் 52, தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

இந்நிலையில், சன் மருத்துவமனையின் நிர்வாகி அகிலேஷ் பாண்டே, இந்த முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்

சமீபத்தில், உத்தரபிதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்களை இனப்படுகொலை என்று கூறியிருந்த சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்