Aran Sei

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மக்களை திருப்பியனுப்பும் சூழல் – மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

காராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும், சில மையங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் மக்களைத் திருப்பியனுப்பும் சூழலும் உருவாகியுள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே தெரிவித்துள்ளார்.

முன்களப்பணியாளர்களை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்கள் சான்றிதழுடன் வந்தால் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்றும், இதற்கு மருத்துவரின் சான்றிதழ் இல்லையென மத்திய அரசு அறிவித்திருந்தது.

தீவிரவாதி என்று நினைத்து ராணுவத்தால் சுடப்பட்ட மகன் – 16 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் 74 வயது தாய்

இதன்படி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதால், தடுப்பூசி கையிருப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்  தோப்பே, “கொரோனா தடுப்பூசி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. கையிருப்பு இல்லாமல் சில மையங்களில் மக்கள் திருப்பியனுப்ப பட்டுள்ளனர்.

வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தலில் பயன்படுத்தப்பட்டதில்லையென தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

எனவே மகாராஷ்டிராவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை தவிர்க்கக் கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே தெரிவித்துள்ளார்.

Source : The Hindu Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்