Aran Sei

மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்

Credit: The Wire

ந்தியாவில் மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு இருப்பது ’அதிர்ச்சியளிக்கிறது’ என்று பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா தெரிவித்துள்ளார்.

ஹவாயில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போது, ”இந்தியாவில் நடைபெற்று வருவதை எதிர்க்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். இந்திய பத்திரிகையாளருக்கும் உங்களுக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் அதைப் பற்றி பேச வேண்டும். எல்லோரும் இதை பற்றி எழுத வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் – ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸ்

”டீஸ்டா செடல்வாட், முகமது ஜுபைர் கைது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய பத்திரிகையாளருக்கும் உங்களுக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் அதைப் பற்றி பேச வேண்டும். எல்லோரும் இதை பற்றி எழுத வேண்டும். இதை நான் என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். நான் கைது செய்யப்பட்டபோது, மக்களும் பத்திரிகையாளர்களும் களத்தில் குதிக்கவில்லை. நீங்கள் பாருங்கள் ஒரளவு சுயநலம் தான் காரணம். ஆனால், எப்படி அனைவரையும் ஒன்றிணைப்பது? எல்லோரிடமும் பேச வேண்டும். மக்களை ஒன்றிணைக்கிறீர்கள். இதில் பத்திரிகையாளர்களை விட செயற்பாட்டாளர்கள் சிறந்தவர்கள். ஏனெனில் கதையை கதையாக சொல்ல வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், இது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இது அதிக தலைப்பு செய்திகளில் இடம் பெற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Source: The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்