மகாராஷ்ட்ராவில் பாஜக தொண்டர் ஒருவரை கடுமையாகத் தாக்கிய சிவசேனா தொண்டர்கள் 17 பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, மாநில அரசைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய ஷிரிஷ் கடேகர், உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவுள்ளது.
இதனால் கடுமையான ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் 17 பேர் ஷிரிஷுனுடைய வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். அவரை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து கடுமையாகத் தாக்கிய சிவசேனா தொண்டர்கள், அவர்மீது கருப்பு மையை ஊற்றியும், கழுத்தில் வளையல் மாலையை அணிவித்தும், சேலையை வலுக்கட்டாயமாக அணிவித்து சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு
ஷ்ரிஷ் கடேகரை சிவசேனா தொண்டர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேர்மீது பந்தர்பூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா தொண்டர்களின் கைதைத் தொடர்ந்து பேசிய காவல்துறை அதிகாரி விகரம் கதம், “நாங்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரையும் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளோம். அவர்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்” என தெரித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.