Aran Sei

‘எதிர்கட்சிகளின் மகா கூட்டணியின் ஆன்மா காங்கிரஸ்; ஆனால் தலைமையை ஆலோசித்தே முடிவெடுப்போம்’ – சிவசேனா

தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை வரும் நாட்களில் தொடங்கும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்

நேற்று (மே 9), செய்தியாளர்களை சந்தித்து பேசிய சஞ்சய் ரவுத்,நாட்டில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வலுவான கூட்டணியாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதுகாங்கிரஸ் கட்சி இல்லாமல் இந்த கூட்டணி அமைய முடியாது காங்கிரஸ் இக்கூட்டணியின் ஆன்மாவாக இருக்கும். அதேநேரம், கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகளுக்கு பிறகே கூட்டணிக்கான தலைமை முடிவு செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் – சிவசேனா யோசனை

“மகாராஷ்ட்ராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் கீழ், கருத்தியல் ரீதியாக மாறுபட்ட மூன்று கட்சிகள் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்) ஒன்றிணைந்து செயல்படுகிறது. கூட்டணிக்கான தலைமை ஒருமனதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு வழங்கப்பட்டதுஇது ஒரு சிறந்த கூட்டணி. சிறப்பாகவும் செயல்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “அண்மையில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளதுஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. இது நல்ல விஷயமல்லகட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் இந்தியா அளவிலான ஒரு கட்சி.” என்று சஞ்சய் ரவுத் குறிப்பிட்டுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்