மாடு, மாட்டின் கோமியம், சாணம் ஆகியவற்றின் வழியாக தனிநபர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, நம் நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
நேற்று(நவம்பர் 13), அம்மாநில தலைநகர் போபாலில், இந்திய கால்நடைப் பராமரிப்பு கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஒன்றிய அரசின் கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அந்நிகழ்ச்சியில் பேசியுள்ள சிவராஜ் சிங் சவுகான், “மாடு, மாட்டின் கோமியம், அதன் சாணம் ஆகியவற்றின் வழியாக ஒருவரின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். அதன்வழியாக, நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும். மத்திய பிரதேச மாநில அரசு இரு மாடு காப்பகங்களையும், மாடுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இடங்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால், மத்திய பிரதேச அரசு மட்டும் தனித்து செயல்பட முடியாது. மாறாக, நம் சமூகத்தின் பங்களிப்பும் அவசியமானது ஆகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சுடுகாடுகளில் விறகுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, மாட்டின் சாணத்தால் ஆன வரட்டிகளைப் பயன்படுத்தலாம். இதன் வழியாக, மரக்கட்டை பயன்பாடு குறையும்” என்று அவர் கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.