Aran Sei

இந்தியாவில் மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது – சிவ சேனா எம்.பி சஞ்சய்ரவுட் கருத்து

ந்தியாவில் தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் 1975 ஆம் ஆண்டின் அவசரநிலை காலகட்டமே (emergency) மேல் எனத் தோன்றுகிறது என்று சிவ சேனா கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ரவுட் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி தனது பாட்டியும்,  இந்திய முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நடைமுறைப்படுத்திய அவசரநிலை குறித்து சில நாட்களுக்கு முன்னாள் தெரிவித்திருந்த கருத்துகுறித்து இவ்வாறு கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் சட்டவிரோதமானதா? – ஆராயும் உச்சநீதிமன்றம்

அவசரநிலை குறித்து பேசிய சஞ்சய் ரவுட் “இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைக்கு இந்நாட்டின் மக்கள் தக்க தண்டனையைக் கொடுத்தார்கள், இந்திரா காந்தி அதிலிருந்து நல்லப் பாடத்தைக் கற்றார். ஆனாலும் சில நாட்களிலேயே மக்கள் அவரை மன்னித்தார்கள், மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், இது பழைய கதை, மீண்டும் மீண்டும் இதுகுறித்து பேச வேண்டிய அவசியமில்லை எனவும், இந்தச் சம்பவத்தை இதோடு மறந்து விடவேண்டுமெனவும் சஞ்சய்ரவுட் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு இது எதிர்க்கருத்தாகக் கூறப்பட்டிருந்தாலும், உண்மையில் இது மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை மையப்படுத்தி கூறப்பட்ட கருத்து எனத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`இந்தியா எதிர்கொள்ளும் சவாலே மோடியின் ஆட்சிதான்’ – ஜோதிமணி

பாஜக அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோரின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது எனவும், சூழலியலாளர் திஷா ரவி கைது செய்யப் படுகிறார் எனவும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் குறிப்பிட்டது போல இந்த நாட்டில் மறைமுக அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்றும் சஞ்சய் ரவுட் கூறியுள்ளளாரென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை

மேலும், “பாஜக அரசு ஊடக சுதந்திரத்தில் தலையீடுகிறது, சட்டங்களைத் தனக்கு சாதகமாக வளைக்கிறது. இதுவெல்லாம் 1975 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர நிலையைப் போன்றே உள்ளது. இந்தியாவில் மறைமுக அவசர நிலை நிலவுகிறது” என்று சிவ சேனா கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளதாகத்                       தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்