Aran Sei

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் – சிவசேனா யோசனை

க்கிய முற்போக்குக் கூட்டணியை (UPA) மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும், பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸின் தலைமையில் செயல்படத் தயாராக இல்லை என்பதால், இக்கூட்டணிக்கு சரத் பவார் போன்ற மூத்த தலைவர் தலைமை தாங்க வேண்டும் என்றும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டணியின் எதிர்காலமானது, காங்கிரஸ் கட்சியின் தியாகம் மற்றும் தாராளத்தை பொறுத்தே இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

“நாட்டை வழிநடத்த ராகுல் காந்திக்குப் பக்குவம் போதாது” – ஷரத் பவார்

நேற்று (பிப்ரவரி 28), மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த ஜெய்பீம் விழாவில், சஞ்சய் ரவுத் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) விட்டு, அதன் கூட்டணி கட்சிகள் வெளியேறிவிட்டன. இப்போது, அப்படியொரு கூட்டணியே இல்லை. அதேபோல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (UPA) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கட்சிகளே உள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ் தலைமையின் கீழ் செயல்பட, பல பிராந்திய கட்சிகள் தயாராக இல்லை. ஆகவே, தற்போதைய அரசிற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமெனில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

’ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவாரை தலைவராக்க வேண்டும்’ – மாநிலக் கட்சிகளின் புது முயற்சி

“மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த புதிய கூட்டணியை சரத் பவார் போன்ற மூத்த தலைவர் வழிநடத்த வேண்டும். அது நடக்குமானால், எதிர்காலத்தில் நிறைய கட்சிகள் இக்கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியமேயில்லை. மறுசீரமைக்கப்பட்ட இக்கூட்டணியின் எதிர்காலம், காங்கிரஸ் கட்சியின் தியாகம் மற்றும் தாராளத்தை பொறுத்தே இருக்கிறது.” என்று சஞ்சய் ரவுத் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன்றைய டெல்லியானது காது கேளாததுமாகவும் ஊமையாகவும் உள்ளது. தேசிய தலைநகரில் எந்த செயற்பாடுகளும் இல்லை. பேசுவதற்கு  ஒரு சிலரே உள்ளனர். பெரும்பான்மையாக இருக்கும் கட்சிக்கு கூட பேச்சு சுதந்திரம் இல்லை. ஒருவருக்கொருவர் சந்திக்க அவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. எங்களைப் பார்த்தால் கூட அவர்கள் சிரிப்பதில்லை. எங்களை நோக்கி கையசைத்தால் கூட, அவை சிசிடிவியில் படம் பிடிக்கப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத்பவார் விவசாய சட்டங்களை ஆதரித்தாரா? – கடிதத்தை பரப்பும் பாஜக

மேலும், “இப்போது, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசிய அரசியலில் களம் காண டெல்லியில் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நான் எப்போதும் உத்தவ் தாக்கரேவிடம் இதை சொல்வேன். இந்நாடு உங்களுக்காக காத்திருக்கிறது. நாட்டிற்கு நீங்கள் தேவை. எதிர்க்கட்சிகளும் பிராந்திய கட்சிகளும் ஒரு தலைமையை விரும்புகின்றன. அத்தகைய தலைமையை நீங்கள் மகாராஷ்டிராவில் காணலாம்.” என்று சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்