Aran Sei

‘இது ஒரு போர் சூழல்; கொரோனா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்’ – மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

க்கட்டான கொரோனா சூழலைப் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.” என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 19) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஒரு முன்னெப்போது நிகழாத சூழல். கிட்டத்தட்ட ஒரு போர் சூழலைப் போன்றது. எல்லா இடங்களிலும் குழப்பமும் பதற்றமும் நிறைந்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, தடுப்பூசியும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு குழப்பத்தின் பிரளயம்தான். இந்த இக்கட்டான சூழலைப் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.” என்று சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்