Aran Sei

அமித் ஷாவை சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் – சிவசேனா கண்டனம்

ஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், ஒரு மாநிலத்தின் பிரச்சினைகளை பதவி நீக்கம் செய்யப்பட்ட முதலமைச்சருடன் விவாதித்தது கண்டனத்திற்கு உரியது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று(அக்டோபர் 2), சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் ஒருவருடன் எல்லை பாதுகாப்பு பிரச்சனை குறித்து விவாதிக்க ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு உரிமை இல்லை. எல்லைப் பாதுகாப்பு விவகாரம் மிகவும் முக்கியமானது என்றால், அதை கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பதிலாக தற்போதைய பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியுடன் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளது.

“காஷ்மீர், லடாக் போன்ற எல்லை பகுதிகளுக்குள் யாராவது ஊடுருவியுள்ளார்களா? இப்பிரச்சினை மிகவும் முக்கியமானதாக இருந்தால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அதை பஞ்சாப் மாநில முதலமைச்சருடன்தான் விவாதித்திருக்க வேண்டும். நீக்கப்பட்ட முதலமைச்சருடன் மாநிலத்தின் பிரச்சனைகளை விவாதிப்பது எவ்வகையில் சரி? இந்தப் புதிய பண்பாட்டை ஒன்றிய அரசு தொடங்கி வைத்திருக்கிறது. இது நியாயமில்லை” என்று சாம்னாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா – குளறுபடிகளின் கூடாரமாகிறதா பஞ்சாப் காங்கிரஸ்?

“கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு, அவர் காங்கிரஸுக்கு வெளியிலிருந்தே தீங்கு விளைவிப்பார் என்று தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 29 அன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதித்ததாகவும், மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்து, பிரச்சனைக்கு தீர்வளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறிப்பட்டதையொட்டி இந்த தலையங்கம் வெளியாகி உள்ளது.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்