Aran Sei

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

ண்டிதர் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் முந்தைய அரசுகள் செய்த வளர்ச்சி பணிகளாலும், திட்டங்களாலும், அவை தந்த நம்பிக்கையாலும்தான் நம் நாடு தற்போதைய கொரோனா பரவலில் தப்பிப்பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் வெளியிடப்பட்ட தலையங்கத்தில், இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவது, மொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், கொரோனாவிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ முன் வர வேண்டும் என்று பல நாடுகளுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளதை நினைவூட்டியுள்ளது.

பெட்ரோல் விலை குறைந்தால் “ராமரும் மகிழ்ச்சியடைவார்” – சிவசேனா கருத்து

“10,000 ரெம்டெசிவிர் மருந்துகளை வங்கதேசம் அனுப்பியுள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜனை பூட்டான்  அனுப்பியுள்ளது. நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளும் ‘சுயசார்பு’ இந்தியாவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன.” என்று  தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

“இந்தக் கொரோனா பெருந்துயரில், நேரு-காந்தி உருவாக்கிய கட்டமைப்பால்தான் இந்தியா தப்பிப்பிழைத்துக் கொண்டிருக்கிறது. பல ஏழை நாடுகள் இந்தியாவுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. முன்னர், பாகிஸ்தான், ருவாண்டா, காங்கோ போன்ற நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுவந்தன. ஆனால், இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் காரணமாக, இந்தியா இப்போது அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.” என்று சாம்னா சுட்டிக்காட்டியுள்ளது.

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

வங்கதேசம், இலங்கை, பூட்டான் போன்ற நாடுகளின் உதவிகளை இந்தியா பெற்றுக்கொள்கிற அதேநேரம்,  பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்படும், புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்தை உள்ளடக்கிய சென்டரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த தயாராக இல்லாத மோடியின் செயல் யாரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிதர் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் முந்தைய அரசுகள் செய்த வளர்ச்சி பணிகளாலும், திட்டங்களாலும், அவை தந்த நம்பிக்கையாலும்தான் நம் நாடு தற்போதைய கொரோனா பரவலில் தப்பிப்பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று தலையங்கத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்