Aran Sei

‘ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி இரண்டாவது ஜாலியன்வாலா பாக்’ – சிவசேனா கண்டனம்

ரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை இரண்டாவது ஜாலியன்வாலா பாக் என்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அரசிற்கு இனி ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28), ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக மாநில தலைவர் ஓ.பி.தங்கர் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டம் நடைபெற்ற கர்னல் நகர் நோக்கிச் சென்ற விவசாயிகளைத் தடியடி நடத்தி கலைத்ததன் காரணமாக 10 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து, இன்று (ஆகஸ்ட் 30), சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவின் தலையங்கத்தில், “அமிர்தசரஸில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் போது, ​​ஹரியானாவில் இரண்டாவது ஜாலியன்வாலா பாக் நடந்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தால் வன்முறை விதைகள் விதைக்கப்படுகின்றன. மனோகர் லால் கட்டார் அரசிற்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை.” என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

“இந்தத் தடியடி சம்பவம் இந்தியாவில் விவசாயிகளை தட்டியெழச் செய்து, அவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பதில் கேட்கும். முதலமைச்சர் கட்டருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் ஹரியானாவில் விவசாயிகள் தலையில் லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒன்றிய அமைச்சர் ஒருவர் மகாராஷ்டிரா முதலமைச்சரை தாக்குவேன் என்று பேசுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், ​​மாநில அரசைச் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று குற்றஞ்சாட்டிய விமர்சகர்கள் ஏன் இப்போது அமைதியாக இருக்கிறார்கள்?” என்று தலையங்கத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளது.

“டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓர் ஆண்டாக மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரியும், விவசாயத்தை தனியார்மயமாக்குவதை தடுப்பதற்கும் போராடி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி அவர்களை சந்திக்கவில்லை. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ‘ஜன் ஆசிர்வாத்‘ என்ற பெயரில் மக்களிடம் ஆசிர்வாதம் கோரி பேரணிகளை நடத்தி வருகிறது. விவசாயிகளின் தலையை உடைப்பதன் வழியாக மக்களின் ஆசீர்வாதம் அவர்களுக்கு கிடைக்குமா.” என்று சாம்னாவின் தலையங்கத்தில் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து, ஹரியானாவிலும் பஞ்சாப்பிலும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய பதிவுகள்:

விவசாய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பாஜக தலைவருக்கு எதிரான போராட்டம் – விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறை

ஹரியானா விவசாயிகள் மீதான காவல்துறையின் தாக்குதல்: கண்டித்து போராட்டத்தில் களமிறங்கிய பஞ்சாப் விவசாயிகள்

விவசாயிகள் மீதான் தடியடி நடத்திய விவகாரம்; ஹரியானா முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் – மேகாலயா ஆளுநர் வலியுறுத்தல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்