Aran Sei

‘நாட்டிலுள்ள பிரச்சனைகளை பேசாமல், ராகுல் காந்தியின் இரவு விருந்தை பேசிக்கொண்டிருக்கிறது பாஜக’ – சிவசேனா விமர்சனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றதை கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவை, மகாராஷ்ட்ராவில் ஆளும் அரசான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா கடுமையாக சாடியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, நேபாளத்தில் இரவு விருந்தில் பங்கேற்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இதற்கு, பாஜக தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக, சாம்னாவில் வெளியான தலையங்கத்தில்,

“நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறதா என்று பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடியின் தலைமையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, மாறாக 25 மில்லியன் வேலை இழப்பு நேர்ந்துள்ளது.

ராகுல் காந்தி இரவு விருந்து சர்ச்சை: ‘நாடாளுமன்றத்தில் ஆபாச படங்கள் பார்ப்பதைவிட மோசமானதல்ல’ – எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்

மின்சார பற்றாக்குறை, வேலையின்மை, விவசாய விளைப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, பணவீக்கம், நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல் போன்றவற்றைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, ராகுல் காந்தியின் நேபாளப் பயணத்தின் மீது பாஜகவினர் அம்பு எய்துக்கொண்டிருக்கின்றனர்.

ராகுல் காந்தி நேபாளத்தில் தன்னுடைய பத்திரிக்கையாளர் நண்பரின் திருமணத்திற்காக சென்றிருந்தார். எந்த அரசியல் தலைவர்களும் இப்படி தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லையா? நீங்கள் சென்றது இல்லையா? ஐந்து நட்சத்திர விடுதிகளில் பார்ட்டியில் கலந்து கொண்டதில்லையா?

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகும், ஜோத்பூரில் வன்முறை நடக்கிறது என்கிறது பாஜக கூறுகிறது. அங்குள்ள நிலைமையைப் பற்றிக் கூட ராகுல் காந்தி கவலைப்படுகிறாரா என பாஜக கேட்கிறது.

ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்த உஸ்மானியா பல்கலைக்கழகம் – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்கள்

ரமலான் பண்டிகையன்று காஷ்மீரில் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டனர். இந்த நிலை பாஜகவுக்கு கவலை அளிக்காதது போல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இந்து கலாச்சாரம் மற்றும் இந்துத்துவம் என்ற பெயரில் நாட்டில் உருவாக்கப்படும் சூழல், இந்து மதத்தின் அடிப்படை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: India Today

நான் ஆந்திரா போகணுமா? I சீமான் ஒரு எட்டப்பன் I Kamatchi Naidu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்