Aran Sei

‘பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார்’ – சஞ்சய் ராவத் எம்.பி.,

credits : the indian express

பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார் என்றும் உண்மையில் மோடி ஹிட்லரைப் பின்பற்றுகிறார் என்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 8), மகாராஷ்ட்ர தலைநகர் மும்பையில் சிவசேனாவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சஞ்சய் ராவத், “பிரபலமான தலைவராக இருந்த ஹிட்லரை சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயும் வியந்து பாராட்டினார். மோடி செய்த பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார். உண்மையில் மோடி ஹிட்லரைப் பின்பற்றுகிறார். சமூக வலைதளங்களைப் பாருங்கள். ஹிட்லர் எப்படி சில விஷயங்களைச் செய்தாரோ, அதையே மோடியாலும் அவரது கட்சியாலும் செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

1936 இல் பெர்லினில் கோடைகால ஒலிம்பிக்கை ஜெர்மனி நடத்தியதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிட்லர் ஒரு பிரபலமான தலைவராக இருந்தார். பின்னர் அவர் தோற்கடிக்கப்பட்டார். பாலாசாகேப் தாக்கரே (சிவசேனா நிறுவனர்) அவரை வியந்தார். பிரதமர் மோடி கூட ஹிட்லர் நேசிக்கிறார். தற்போது, ​​யாராவது ஹிட்லரைப் புகழ்ந்தால், அதை தேசத்துரோகமாகக் கருத முடியாது” என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Source: PTI

Aransei Podcast  என் பால்யமும் தாராவியும் | Citizen of dharavi Ft Maghizhnan |

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்