Aran Sei

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம் என்று சிவசேனாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 3), ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர், “பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் விவாதம் நடத்தக் கோரியும் ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருந்தார்கள். அப்படி இருக்கையில், ஏன் இவர்கள் இன்று எதிர்க்கட்சிகள் பெகசிஸ் குறித்து விவாதம் கோரினால் கேள்வி எழுப்புகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

“வித்தைகள் காட்டுவதில் மோடி அரசு ஒரு மாஸ்டர். பெகசிஸ் ஒட்டுக்கேட்பு ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று வாய் மொழியாக சொல்கிறதே அன்றி, எப்போது விவாதிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்துள்ளோம். நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம்.” என்று உறுதியளித்துள்ளார்.

Source; ani

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்