மஹாராஷ்டிர மாநிலத்தின் சுயேட்சை மக்களவை உறுப்பினரை அம்மாநிலத்தை சேர்ந்த சிவ சேனா கட்சியின் மக்களவை உறுப்பினர் மிரட்டியுள்ளதாக மக்களவை அவைத்தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது சுயேட்சை உறுப்பினரான நவநீத் ராணா, மும்பை காவல் துறை முன்னாள் காவல் ஆணையர் மகாராஷ்டிரா அரசின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மக்களவையில் சச்சின் வேஸ் வழக்கு குறித்து பேசியதற்காக சிவ சேனா கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அரவிந்த் சாவந்த் தன்னை மிரட்டியுள்ளதாக அமராவதி பகுதியின் சுயேட்சை உறுப்பினர் நவநீத் ராணா கடிதத்தின் வாயிலாகப் புகார் அளித்துள்ளார்.
#WATCH Today,after I spoke on Mansukh Hiren& Sachin Waze cases in Parliament,ShivSena's Arvind Sawant said "ab tumhe jail mein bhejna hai."..Will a man tell me how to speak now? My colleague Bharat from Rajahmundry told me he heard what Sawant had said:Maharashtra MP Navneet Rana pic.twitter.com/6hGHkAkl65
— ANI (@ANI) March 22, 2021
அந்தக் கடிதத்தில் நவநீத் ராணா , சிவ சேனா கட்சியைச் சார்ந்த அரவிந்த் சாவந்த் ” நீ எப்படி மஹாரஷ்டிராவுக்கு வருகிறாய் என்று பார்க்கிகிறேன் ” என்று மிரட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவித்த நவநீத் ராணா , ” என்னைப் பார்த்து மிக மோசமான வார்த்தைகளை அரவிந்த் சாவந்த் பிரயோகித்தார் மிகுந்த அவமானதிற்கு ஆளாகி இருக்கிறான் . அரவிந்த் சாவந்த் என்னைமட்டுமல்ல பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தி இருக்கிறார்” என்றும் கூறியுள்ளார்.
SOURCE; ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.