Aran Sei

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (யுபிஏ) தலைவராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (மார்ச் 20), மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  பாஜகவுக்கு வலுவான ஒரு மாற்றாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்துவதே இக்காலத்தின் தேவை என்று கூறியுள்ளார்.

’ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவாரை தலைவராக்க வேண்டும்’ – மாநிலக் கட்சிகளின் புது முயற்சி

“காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யுபிஏ தலைவர் பொறுப்பை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அவருக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. அரசியல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக இல்லை. அதனால், சரத் பவார் யுபிஏ தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுவடைவதன் வழியாக, காங்கிரசு கட்சியும் பயனடையும் என்று சஞ்சய் ரவுத் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை.

சரத்பவார் விவசாய சட்டங்களை ஆதரித்தாரா? – கடிதத்தை பரப்பும் பாஜக

அண்மையில், சஞ்சய் ரவுத் நிர்வாக ஆசிரியராக இருக்கும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா, சரத் பவார் யுபிஏவின் தலைவராவதால், அக்கூட்டணிக்கு எவ்வகையில் இது பயனளிக்கும் என்று விளக்கும் ஒரு தலையங்கத்தை வெளியிட்டிருந்தது.

அதில், பாஜகவை முழுபலத்துடன் எதிர்க்க சிவசேனா, அகாலி தளம் போன்ற கட்சிகளும் யுபிஏவின் கீழ் வர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்