Aran Sei

‘காங்கிரஸுக்கு தலைவர் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கும்’ – கூட்டணி கட்சியான சிவசேனா கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைவர் தேவை என்று  சிவசேனா கட்சியின் மாநிலங்களைவை உறுப்பினர் சஞ்சய் ராவத்  கூறியுள்ளார்.

நேற்று (அக்டோபர் 2), மகாராஷ்ட்ர மாநில தலைநகர் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்து சஞ்சய் ராவத் பேசியுள்ளார். அப்போது, “காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவர் இல்லாமல் இருந்தால், அதுவே தானாக குழப்பத்திற்கு வழிவகுக்கும். எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், தலைமை இல்லாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி விரைவில் கட்சிக்குள் நிலவும் அரசியல் குழப்பத்தைத் தீர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அவர் கூறியுள்ளார்.

‘எதிர்கட்சிகளின் மகா கூட்டணியின் ஆன்மா காங்கிரஸ்; ஆனால் தலைமையை ஆலோசித்தே முடிவெடுப்போம்’ – சிவசேனா

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். கட்சி நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி, அக்கட்சிக்குள் கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

மகாராஷ்ட்ராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. இக்கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்