மும்பையில் கப்பலில் போதைப் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படும் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (என்சிபி) மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்பான விவகாரங்களில் நீதி விசாரணை வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.
மும்பை மண்டல என்.சி.பி யால் என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் வழக்கைத் தானாக முன்வந்து வழக்கை நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
”மும்பை என்.சி.பியின் தவறான பாணி, அணுகுமுறை மற்றும் மோசமான பழிவாங்கும் நடவடிக்கைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரபலங்கள் மற்றும் சில மாடல்களை குறிவைக்கப்படுவதில் என்சிபியின் பங்குகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக் கொள்கிறேன்” என கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.
என்சிபியின் செயல்பாடுகள்குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் அறிக்கைகுறித்து மனுவில் சுட்டிக்காட்டிய திவாரி, உண்மையை வெளியே கொண்டு வர என்சிபி குறித்து விசாரிக்கப்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதி கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் தற்போது மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.