Aran Sei

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா முடிவு

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்கரே உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, ராவது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”மேற்கு வங்க தேர்தலில் சிவசேனா போட்டியிடுகிறதா? இல்லையா என்பதை அறிய பலர் ஆர்வமாக இருக்கின்றனர். கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுடனா கலந்துரையாடலிலுக்கு பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டிருந்தார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

“மேற்கு வங்கத்தின் தற்போதையை நிலைமை தீதி (மம்தா பானர்ஜி)க்கும் மற்ற அனைவருக்குமான மோதலாக இருக்கிறது. அவருக்கு எதிரானவர்கள் பணம், பதவி, ஊடகம் என அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

”மம்தா ஒரு உண்மையான வங்கப்புலி என்பதை நாங்கள் நம்புகிறோம், அவர் ஒரு அசாதாரண வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம்” என்றும் அந்த ட்விட்டர் பதிவில் சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது சிவசேனாவும் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்