Aran Sei

உத்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு

த்தவ் தாக்ரே உறவினரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் உறவினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

மும்பை அருகே தானேவில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கிரிஹனிர்மிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான நீலாம்பரி திட்டத்தின் 11 குடியிருப்புகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கும் தற்காலிக உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

ஸ்ரீ சாய்பாபா கிரிஹனிர்மிட்டி நிறுவனம் உத்தவ் தாக்ரேவின் மனைவி ராஷ்மியின் சகோதரர் ஸ்ரீதர் மாதவ் பதங்கருக்கு சொந்தமானது.

சிவ சேனாவின் இரண்டு ஊடகங்களான சாம்னா மற்றும் மார்மிக்கின் ஆசிரியராக ராஷ்மி தாக்ரே உள்ளார்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவ சேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் நடவடிக்கை ”நாட்டில் கொடூரமான சர்வாதிகாரத்தை” குறிக்கிறது என ராவத் கூறியுள்ளார்.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

நீதித்துறை, நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் விசாரணை முகமைகள் ’சர்வாதிகார போக்குகளின் அடிமைகள்’ போல செயல்படுகின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் நிழவும் சூழ்நிலையில் நீதிமன்றத்திலிருந்தும் நீதியை எதிர்பாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்