Aran Sei

ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதக்கங்களில் ஷேக் அப்துல்லா படம் அகற்றம் – வரலாற்றை சிதைக்கும் முயற்சி என எதிர்கட்சிகள் கண்டனம்

Credit: The Hindu

ம்மு காஷ்மீர் காவல்துறைக்கு வழங்கப்படும் பதக்கங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரும் காஷ்மீர் சமஸ்தானத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமருமான ஷேக் அப்துல்லாவின் படத்தை அகற்றும் முடிவிற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காவல்துறையினருக்கு வழங்கப்படும் பதக்கங்களில் ஷேக் அப்துல்லாவின் படத்திற்கு பதிலாக தேசிய சின்னம் இடம்பெறும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

துணைநிலை ஆளுநரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ”ஷேர்-இ- காஷ்மீர்லிவ்ஸ்ஆன்” என்ற ஹேஷ்டேக்குடன் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

”காஷ்மீரின் வளமான வரலாற்றைச் சிதைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாத நிலையில், வீர தீரச் செயல்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் இருந்து ஷெர்-இ-காஷ்மீரின் பெயரை நீக்குவது என்பது மக்களின் ஒப்புதல் இல்லாமல் சட்டங்களைத் திணிப்பதாகும். இது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது.” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாரா ஹயத் ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் மற்றொரு உறுப்பினர் தன்வீர் சாதிக், ”ஒரு மனிதன் இறக்கலாம். நாடுகள் வளர்ச்சியடையலாம் மற்றும் வீழ்ச்சியடையலாம். ஆனால் சிந்தனை வாழும். எண்ணங்களுக்கு மரணமில்லாத சகிப்புத்தன்மை உண்டு” என்ற ஜான் எஃப் கென்னடியின் புகழ்பெற்ற மேற்கோளைப் பதிவிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

‘விவசாயிகளை போல காஷ்மீரிகளும் தியாகங்கள் மூலமே தங்கள் உரிமைகளை திரும்பப் பெற வேண்டியிருக்கும்’- ஃபரூக் அப்துல்லா

துணைநிலை ஆளுநரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நயீம் அக்தார், “ஷேக் அப்துல்லாவை அவுரங்கசீப் போல பாஜக பார்க்கிறது. அவர் இல்லை என்றால், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்காது.”என்று தெரிவித்துள்ளார்.

இது ஆட்சியாளர்களின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, “இரு தேசக் கோட்பாட்டிற்கு எதிராக மதச்சார்பற்ற இந்தியாவை ஏற்றுக்கொள்வதற்கான பெரிய மற்றும் தைரியமான முடிவை எடுத்தவர் ஷேக் அப்துல்லா. அந்த பெயர் இப்போது அழிக்கப்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளார்.

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.ஒய். தாரிகாமி, “பெயரை மாற்றுவதன் மூலம் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான பாஜகவின் முயற்சி, அதன் குறுகிய வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், வரலாற்றை நிறுவுவதற்கு உதவியாக இருக்காது. ஷேக் அப்துல்லாவின் பங்களிப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அற்பமாக பெயர்களை மாற்றுவதன் மூலம் அழிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பதக்கத் திட்டத்தின் 4-ம் பத்தி திருத்தப்பட்டுள்ளதாகவும் அதன்படி, பதக்கத்தின் ஒரு பக்கத்தில் பொறிக்கப்படும் ஷேர்-இ-காஷ்மீர் ஷேக் முகமது அப்துல்லாவின் படத்திற்கு பதிலாக இந்திய அரசின் தேசிய சின்னம் மாற்றப்படும் என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

காஷ்மீர், ஸ்ரீநகர் மசூதியில் ரம்ஜான் தொழுகைக்கு தடை: முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

பதக்கத்தின் மறுபுறம் ஜம்மு காஷ்மீர் மாநில சின்னத்துடன் வீரதீர செயலுக்கான ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பதக்கம் மற்றும் “சிறந்த சேவைக்கான ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதக்கம் என்ற வாசகங்கள் பொறிக்கப்படும்.

கடந்த ஆண்டு, ஷேக் அப்துல்லாவின் பிறந்தநாளை விடுமுறைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறை பதக்கங்களில் இருந்து அவரது பெயர் மற்றும் பொறிக்கப்படும் உருவம் அகற்றப்படுகிறது.

Source: The Hindu

Annamalai-க்கு கருத்து சுதந்திரம் பத்தி பேச தகுதி கிடையாது Pasumpon Pandian | Savukku Shankar Arrest

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்