Aran Sei

ஜம்முகாஷ்மீரில் தடுப்புக்காவல் முகாமில் இருந்த ரோஹிங்கிய அகதி மரணம் – கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் அகதிகள்

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளில் ஒருவர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால்  இறந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் , துரித ஆன்டிஜென் பரிசோதனை வழியாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 52 பேரில் இறந்த நூர் ஆயிஷா பேகமும் ஒருவர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பு முகாம்களில் உள்ள 24% ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா தொற்று – மனிதநேய அடிப்படையில் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டுகோள்

இந்நிலையில்,கடந்த மே 31 அன்று கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்ததால் கதுவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஜூன் 7 அன்று உயிரிழந்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நூர் ஆயிஷாவின் மகன் அக்தர்,”சிறை நிர்வாகம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கக்கூடாது என்று தடைசெய்யும் வரை நான் மூன்று முறை என் அம்மாவை பார்தேன். அப்போதெல்லாம் அவர் அழுது கொண்டே எப்போது நம்மை சிறையில் இருந்து விடுவிப்பார்கள் என்றே கேட்பார்” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா அறிகுறி – போதிய ஆவணங்கள் இல்லாததால் பரிசோதனை செய்ய இயலாத அவலம்

கடந்த மார்ச் 6 அன்று, ஜம்முகாஷ்மீர் காவல்துறை அக்தர் அவரின் தாய், தந்தை மற்றும் அண்ணன்,அண்ணி அவர்களது குழந்தைகள் ஆகியோரை தடுப்புக் காவல் முகாமில் அடைத்ததாக தி வயர் செய்தி கூறுகிறது.

இதற்கு முன்னர், போதிய மருத்துவ வசதிகள் இல்லாது, அடையாள அட்டைகளும் இல்லாது ரோஹிங்கிய அகதிகள் கொரோனா அறிகுறிகளோடு தவித்து வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்