Aran Sei

‘உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணிபுரிய வைக்கப்பட்ட ஆசிரியர்’ – கொரோனாவால் உயிரிழந்ததாக குடுப்பத்தினர் புகார்

த்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணியமற்த்தப்பட்ட 27 வயதான ஆசிரியர் கல்யாணி அக்ராஹாரி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் உதவி ஆசிரியராக பணி வழங்கப்பட்ட கல்யாணி, பஞ்சாயத்து தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டிருந்தார். 8 மாத கர்ப்பிணியான தன்னால் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை ஏற்காத மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தலில் பணிபுரியாவிட்டால், அவர்மீது வழக்கு பதியப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூறினார்.  இதனை அடுத்து கல்யாணி ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பணியில் ஈடுபட்டார்.

’தேர்தல் பணியின் போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பொருளாதார உதவி தேவை’ – மாயாவதி

இந்நிலையில், உடல்நிலை பிரச்சனை காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஜாவன்பூரில் உள்ள ஒரு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பு சான்றிதழில் உயிரிழப்புக்குக் காரணம் கொரோனா என தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

உத்திரபிரதேச தேர்தல் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 135 ஆசிரியர்களில், கல்யாணியும் ஒருவர் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசிரியர் சங்கமான ராஷ்டிரிய ஷைக்ஷிக் மகாசங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை பணியைப் புறக்கணிக்கப் போவதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

Source : The Print

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்