Aran Sei

பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை; வரலாற்றைத் திரித்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – சரத் பவார்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காட்டப்படுவது போல, காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டபோது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றும் வி.பி.சிங்தான் ஆட்சியில் இருந்தார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 20), மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாரமதியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சரத் பவார், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காட்டப்படுவது போல, காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. வி.பி.சிங்தான் ஆட்சியில் இருந்தார். அப்போது, பாஜகவின் உதவியுடன் (1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை) முப்தி முகமது சயீத் ஒன்றிய உள்துறை அமைச்சரானார்” என்று கூறியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

“ஜம்மு மற்றும் காஷ்மீரின் அப்போதைய கவர்னர் ஜக்மோகனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவதற்காக இந்த படம் பயன்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், இவையெல்லாம் நடந்தது என சித்தரிக்க முயல்கிறார்கள்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஆனால் நாம் உண்மையை ஆராய்ந்தால், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியின்போது நடந்தது என்பது விளங்கும். இந்த விவகாரத்தில் இப்போது குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பாஜகவினர் சிலர், அப்போது வி.பி.சிங்குக்கு ஆதரவாக இருந்தனர்” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்