Aran Sei

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Image Credits: DNA India

த்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 8), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சரத் பவார், “லக்கிம்பூர் கேரி வன்முறையை நான் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஒப்பிட்டதால் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன. ஜனநாயகத்தில் எங்கள் கருத்துகளை கூற எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம்(அக்டோபர் 7), வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சரத் பவாரின் உறவினரும் மகாராஷ்ட்ரா மாநில துணை முதலமைச்சருமான அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு தொடர்புடைய வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

முன்னதாக, அக்டோபர் 5 அன்று, எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி வன்முரை சம்பவத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையோடு தொடர்புப்படுத்தி பேசிய சரத் பவார், பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார் என்று கூறியிருந்தார்.

லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறைசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவுள்ளதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய மகாராஷ்ட்ராவை ஆளும்  மகா விகாஸ் அகாதி கூட்டணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்