Aran Sei

தவறான வரலாற்றைப் பரப்பும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை திரையிட அனுமதித்திருக்க கூடாது – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றம் தொடர்பாக தவறான தகவலைப் பரப்பும், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்திரைப்படத்தை திரையிட அனுமதித்திருக்க கூடாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையில் கருத்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், சரத் பவார் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் தொடர்பாக தவறானவற்றைப் பரப்புவதன் மூலம் விஷமத்தனமான பிரச்சாரத்தை படம் மேற்கொள்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் போல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் படமாக்க வேண்டும் – ஐஏஎஸ் அதிகாரியின் ட்விட்டுக்கு நடவடிக்கை எடுக்க கோரும் பாஜக

இப்படிப்பட்ட ஒரு படத்தை திரையிட அனுமதித்திருக்க கூடாது. ஆனால் அதற்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டியவர்களே மக்களின் கோபத்தைத் தூண்டும் வகையிலான படத்தை பார்க்க மக்களை ஊக்குவிக்குறார்கள்என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரி பண்டிட்கள் உண்மையில் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என தெரிவித்த பவார், “இஸ்லாமியர்களும் இதே போன்ற நிலையில் குறிவைக்கப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுக்கள் தான் காரணம்எனக் கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ‘உண்மை அமைதி தரும்; பொய் பரப்புரை வன்முறை தரும்’ -ஜெய்ராம் ரமேஷ்

பண்டிட்கள் நலன் மீது நரேந்திர மோடி அரசு உண்மையில் அக்கறை கொண்டிருந்தால், சிறுபான்மையினருக்கு எதிராக கோபத்தை தூண்டாமல், பண்டிட்கள் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதத்தில் ஜவஹர்லால் நேருவின் பெயரை பாஜக குறிப்பிடுவதை விமர்சித்துள்ள பவார், பண்டிட்கள் வெளியேற்றத்தின் போது விபி. சிங் தான் பிரதமராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

பாஜக ஆதரவு பெற்ற வி.பி. சிங் அரசு தான் ஆட்சியில் இருந்தது. முப்தி முகமது சயீத் உள்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் பாஜக வேட்பாளராக டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஜக்மோகன் தான் ஆளுநராக இருந்தார். ஜக்மோகனுடனான கருத்து வேறுபாடு காரணமாக அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதலமைச்ச ஃபரூக் அப்துல்லா ராஜினாமா செய்த நிலையில், பண்டிட்கள் வெளியேற ஆளூநர் தான் உதவினார்என சரத் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் மென்மையான ஒரு போக்கை கடைபிடிப்பதாக கூட்டணி கட்சியான சிவசேனா மத்தியில் ஒரு கருத்து நிலவி வரும் வேளையில், சரத் பவாரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளது

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்