Aran Sei

பெகசிஸ் தொடர்பாக ஒன்றிய அரசின் அறிக்கையைக் கிழித்த மாநிலங்களைவை எம்.பி. – குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க தடை

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசின் அறிக்கையைப் படித்துக்கொண்டிருந்த  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம் இருந்து அதை பறித்து கிழித்ததற்காக திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சாந்த சென் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி. முரளிதரன் தாக்கல் செய்த இடைநீக்கம் தீர்மானத்தை மீதான குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேவு பார்க்கப்பட்டவர்களில் அனில் அம்பானியும் ஒருவர் – ரபேல் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர்களும் பட்டியலில் அடக்கம்

இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள், சம்பவம் தொடர்பாக பதிலளிக்க அவர்களுக்கு எந்த வாய்ப்பு வழங்கபடவில்லை என குற்றம்சாட்டினர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ராய் போன்றவர்களுக்குப் பேச வாய்ப்பளித்திருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

‘இடஒதுக்கீட்டு கொள்கையை அவமதிக்கும் பாஜக’ – பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்

இதற்குப் பதிலளித்த தலைவர் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரம் தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என தெரிவித்தார்.

இதற்கிடையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பதிலளிக்க அனுமதிக்குமாறு வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் கட்சியின் கொறடா ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை வைத்தார்.

உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் – தி வயர் செய்தி நிறுவனம் வெளியீடு

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பிய முழக்கங்களால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்