Aran Sei

’தடுப்பூசிகள் பெற வெளிநாடுகளிடம் கெஞ்சும் இந்தியா’ : சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்

credits : The Indian Express

டுப்பூசியை மேலை நாடுகளில் இருந்து கெஞ்சி பெறுவது தேசபக்தர்களுக்கு மனவேதனையை அளிக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 2,54,288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,85,069 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 2,95,508 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 4142 பேர் மரணமடைந்திருப்பதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிகள் கடுமையாக நிலவி வரும் சூழலில், நேற்றைய தினம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்காக, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க செல்ல இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

இந்நிலையில், இதைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ”சுயசார்பு பாரத தேசம், உலகத்தின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் என்று கருதப்படும் தேசம் தலைகனத்தால் வீழ்ந்து, அமெரிக்காவிடம் இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் தடுப்பூசியைக் கெஞ்சி பெறுவதற்கு,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அனுப்பியுள்ளதை நினைத்து என்னைப் போன்ற தேசபக்தி கொண்ட இந்தியர்கள் வேதனை அடைந்துள்ளோம். உணவு விடுதியின் பணியாளர் (Waiter) போல உடை அணிந்துக் கொள்ளாமல் சென்றால் சரி” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்