Aran Sei

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாலியல் மாற்றத்தை ஊக்குவிப்பதை தடை செய்யும் சட்டம் – ஹங்கேரியில் தடை செய்யப்படுகிறதா ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்?

credits : nbcnews

ங்கேரி நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்களின் ’ஒரினச்சேர்க்கை அல்லது பாலின மாற்றத்தை’ ஊக்குவிப்பதைத் தடை செய்யும் புதிய சட்டத்தின் கீழ் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், சாப்போவின் கவிதைகள் ஆகியவை வகுப்பறைகளில் தடை செய்யப்படலாம்  மற்றும் புத்தகக் கடைகள் கட்டுப்படுத்தப்படலாம் என வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெடோபோலியாவிற்கான அபராதங்களை அதிகரிக்கும் சட்டத்துட்டன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் தடை, அவ்வாறு வேலை செய்யும் என்பது தெளிவாக இல்லை என ஹங்கேரியில் வெளியீட்டாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

எல்.ஜி.பி.டி.க்யூவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரஷ்யா மற்றும் சில அமெரிக்க மாகாணங்களில் ஆதரவு பெருகுவதை தொடர்ந்து, ஹங்கேரியின் ஆளும் தேசியவாத பிடெஸ் கட்சியின் பழமைவாதிகள் இந்த முறையீட்டை வைத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் விக்டர் ஓர்பன், திருநங்கைகள், அவர்களது பாலினத்தை சட்டரீதியாக மாற்றிக் கொள்ளுதல், ஒரே பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுத்தல் ஆகியவற்றை தடை செய்துள்ளார்.

ஹங்கேரிய வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (எம்கேகேஇ) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெடோபிலியா ஒரு குற்றம், பாலியல் நோக்குநிலை என்பது அடிப்படை உரிமை. இவை இரண்டையும் ஒன்றாக பார்ப்பதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளனர்.

எழுபது வயதுக்கு மேற்பட்ட சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் – சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் உச்சநீதிமன்றத்தில் மனு

”தற்போது இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உலக மற்றும் ஹங்கேரிய இலக்கணத்தின் பல தலைசிறந்த படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்… இந்தத் தடையின் கீழ் வரலாம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

கவிஞர்கள் பால் வெர்லைன் மற்றும் ஆர்தர் ரிம்பாட், உலக புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தாமஸ் மான் மற்றும் மார்செல் புரூஸ்ட் ஆகியோர் கூட இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே பாலின காதல் பற்றிய விளக்கங்கள் கொண்ட பண்டைய கிரேக்க கவிஞர் சாபோவின் வரிகள் மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வகுப்பறையிலிருந்து நீக்கப்படலாம் என அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

திரைப்படத்திற்கு மறுதணிக்கை செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா – மக்கள் கருத்துத் தெரிவிக்க ஜூலை 2 வரை அவகாசம்

எம்.கே.கே.இயின் விமர்சனங்களுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. அதில்,“எங்கள் குழந்தைகளை பாதுகாத்தற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை” என அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜொல்டன் கோவாக்ஸ் ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளார்.

“ஓரினச்சேர்கை மற்றும் பாலின மறுசீரமைப்பு தொடர்பாக சிறார்களுக்குக் காட்டுவது அல்லது ஊக்கப்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்துள்ளது. இது போன்ற விசயங்களில் தகவல்களை தெரிவிக்க பதிவு செய்யப்பட்ட தன்னார்லவ குழுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின் நோக்கம்குறித்த கேள்விக்கு ஹங்கேரி அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றும், இந்தச் சட்டம் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள்குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் தெரிவித்தார்.

Source : Reuters

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்