Aran Sei

அரசை விமர்சித்த நிபுணர் குழு உறுப்பினர் ஷாஹித் ஜமீல் ராஜினாமா – அரசின் நிர்பந்தமே காரணம் என்று உறுப்பினகர்கள் கருத்து

credits : The Indian Express

கொரோனா நோய்த்தொற்று பரவலை நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்று விமர்சித்த தொற்று நோய் நிபுணரான ஷாஹித் ஜமீல், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்தும் நிபுணர் குழுவின் தலைமை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உருமாறி வரும் கொரோனா வைரசை கண்காணித்து, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசுக்கு உதவும் வகையில், மத்திய அரசு நிபுணர் குழு (INSACOG) ஒன்றை அமைத்தது. இதன் தலைவராக, தொற்று நோய் நிபுணரான (Virologist) ஷாஹித் ஜமீல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மிக எளிதில் பரவக்கூடிய, புதிய வகை கொரோனா தொற்று (B.1.617) இந்தியாவில் பரவ தொடங்கியிருப்பதாக நிபுணர் குழு அரசாங்கத்தை எச்சரித்ததாகவும், அதை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் ஜமீல் ராய்டர்ஸ் இணையதளத்திடம் தெரிவித்திருந்தார்.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

சில வாரங்களுக்கு முன்னர், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்த ஷாஹித் ஜமீல், ”இந்திய அரசு, குறைவான மக்களையே பரிசோதனை செய்வது, தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் , தடுப்பூசி தட்டுப்பாடு, சுகாதாரத்துறையில் பணிபுரிய போதுமான ஆட்கள் இல்லாதது போன்றவை தான் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான காரணம்” என்று தெரிவித்திருந்தார்.

குழந்தைகளுக்குப் பரவும் கொரோனா – உத்தரகண்டில் 1000 குழந்தைகளுக்கு உறுதியான தொற்று

”கொரோனா நோய்த்தொற்று பரவலை கண்காணிக்கும், நிபுணர் குழுவில் இருக்கும் விஞ்ஞானிகள் அளிக்கும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து திட்டங்களை வகுக்க இந்திய அரசு துளியும் ஒத்துழைக்கவில்லை” என்று ஷாஹித் ஜமீல் தெரிவித்திருந்தார்.

வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி தந்து உதவ வேண்டும் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள் 

”இந்திய அரசு, கொரோனா நோய்த்தொற்று பரவல், அதனால் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட எந்த தகவல்களையும் சரியாக சேகரிக்கவில்லை. கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, 800க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள், கொரோனா நோய்த்தொற்று தொடர்பான தகவல்களை வெளியிட்டால் தான், தொற்று நோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து, அதன் பரவலை கணித்து, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுததிருந்தனர்” என்பதை ஷாஹித் ஜமீல் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?’ – ராகுல் காந்தி கேள்வி

”இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் கையை மீறி சென்று விட்டது, இப்போது, தகவல்களை அடிப்படையாக வைத்து முடிவெடுப்பதும், மரணம் தான். மனித உயிர்களை நாம் தொடர்ந்து விலைகொடுத்து வருவது, ஒரு நிரந்தர வடுவாக அமைய போகிறது” என்று கூறியிருந்தார்.

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கண்காணிக்கும் நிபுணர் குழுவிலிருந்து ராஜினாமா செய்வதாக தொற்று நோய் நிபுணரான ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்து வெளியிட்டுள்ளது.

‘தடுப்பு மருந்துக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன; இந்தியா என்ற நாடு எங்கே போனது?’ – அரவிந்த் கெஜ்ரிவால்

“ நான் விலகியது உண்மைதான், அதை தாண்டி அதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை. என்ன காரணம் என்பதை என்னால் கூற இயலாது” என்று ராய்டர்ஸ் நிறுவனத்திடம் ஷாஹித் ஜமீல் கூறியுள்ளார்.

வைரசுக்கும், வதந்திக்கும் எதிராக இருமுனைப்போர் நடத்த வேண்டும் – வைஷ்னா ராய்

ஷாஹித் ஜமீல் காரணம் எதையும் கூறவில்லையென்றாலும், அவருடன் பணியாற்றிய விஞ்ஞானிகள் பலர், மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று கூறியதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

இந்தியாவில், நேற்றைய தினம், 2,81,386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,49,65,463 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை இநதியாவில் 2,74,390 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் 4106 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்