Aran Sei

“ஆர்எஸ்எஸின் இந்து ராஜ்ஜிய திட்டத்தை செயல்படுத்தாதீர்கள்” – மத்தியஅரசை வலியுறுத்திய சீக்கிய குருத்துவார் குழு

ந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற ஆர்எஸ்எஸ் செய்து வரும் செயல்களால், பிற மதங்களின் மத சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி, பாஜக தலைமையிலான மத்திய அரசை சீக்கிய கோயில்களை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா கூட்டு செயற்குழுவின் (எஸ்ஜிபிசி) விமர்சித்துள்ளது.

நேற்று (மார்ச் 30), சீக்கியர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பான இது, குருத்வாரா  நிர்வாகத்தின் பட்ஜெட் குறித்த அமர்வின்போது, ​​சமூகத்தின் நலன்கள் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

ஆர்எஸ்எஸ் “விஷ்வ குரு” – இந்தியாவுக்கும் உலகத்துக்கும் என்ன கதி? : ஏ ஜி நூரானி

அதில், ஆர்எஸ்எஸ் எதிரான தீர்மானத்தில், “இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் இனங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மதமும் இந்நாட்டின் சுதந்திரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. குறிப்பாக, சீக்கிய சமூகம் 80 சதவீதத்திற்கும் அதிகமான தியாகங்களைச் செய்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கெடுவாய்ப்பாக, இந்நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்ற ஆர்எஸ்எஸ் செய்து வரும் செயல்களால், பிற மதங்களின் மத சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது.  நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் அத்தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

மேலும், “ஆர்எஸ்எஸ்ஸின் முன்னெடுப்புகளை செயல்படுத்துவதிலேயே கவனம் செலுத்தாமல், அனைத்து மதங்களின் உரிமைகளையும் அவற்றின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். சிறுபான்மையினரை அடக்குமுறை செய்யும் அனைத்து குழுகளை தண்டியுங்கள்.” என்று மத்திய அரசை அக்குழு வலியுறுத்தியுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்