Aran Sei

பாலியல் புகாருக்கு உள்ளான டிஜிபி – பணி இடைநீக்கம் செய்த தமிழக அரசு

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது கூடுதல் தலைமை இயக்குனர் பாலியல் துஷ்யரோகம் செய்தார்.  இது தொடர்பாக புகார் தெரிவிக்க முயன்றபோது  செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் தடுத்தார் என ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடவடிக்க எடுத்த தமிழக அரசு காவல்துறை, கண்காணிப்பாலளரை வேறு பிரிவுக்கும், கூடுதல் தலைமை இயக்குனரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – நடவடிக்கை எடுக்காதது ஏனென்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கின் விசாரணைய தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இன்னும் அந்த அதிகாரியை ஏன் பணி இடைநீக்கம் செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.

இதனையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அந்த அதிகாரியைத் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்