Aran Sei

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: 8 வாரத்திற்குள் விசாரணை முடியும் – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி  பதில்

Image Credits: New Indian Express

மிழக அரசின் காவல்துறை சிறப்புத் தலைமை இயக்குனர் மீதான வழக்கில் 8 வாரத்திற்குள் விசாரணை முடிக்கப்படும் என சென்னை  உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை சிறப்பு தலைமை இயக்குனர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக, காவல்துறை தலைவர் திரிபாதி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.

கைகளால் மலம் அள்ளும் முறை ஒரு தேசிய அவமானம் – மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க ஜெயாபச்சன் வலியுறுத்தல்

இது தொடர்பாக புகார் அளிக்க வந்தபோது செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் பெண் அதிகாரியைத் தடுத்து நிறுத்தி மிரட்டியதாகப் தகவல் வெளியானது. இதையடுத்து, காவல்துறை சிறப்புத் தலைமை இயக்குனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.

சிபிசிஐடி காவல்துறையினருக்கு வழக்கு மாற்றப்பட்டு பெண் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, பாலியல் தொல்லைகுறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியைத் தடுத்தாக செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர்  பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை சிறப்பு தலைமை இயக்குனரை இடைநீக்கம் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கேரளாவில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் இயற்றப்படும் – மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி

பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறை சிறப்பு தலைமை இயக்குனர் மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16 ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரி பணியிடை நீக்கம்  செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். மேலும், விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? எனக் கேள்வி எழுப்பினார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டுவரப்படும் – பாஜகவின் அசாம் தேர்தல் அறிக்கை

சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காவல்துறை சிறப்பு தலைமை இயக்குனரின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வு அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும் விளக்கமளித்தார். மேலும், 8 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்கக் காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அன்றைய தினம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்