நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 29 ஆம் தேதி துவங்கி, டிசம்பர் 23 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்று(நவம்பர் 17), மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதினேழாவது மக்களவையின் ஏழாவது அமர்வு, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, திங்கட்கிழமை தொடங்கும். அரசு அலுவல்களின் தேவைகளுக்கு ஏற்ப, இந்த அமர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, வியாழன் அன்று முடிவடையும்” என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களவையும் இதே உத்தரவை பிறப்பித்துள்ளது.
நேற்று(நவம்பர் 17), மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் தேதி, திங்கட்கிழமை, புது டெல்லியில் மாநிலங்களவையைக் கூட்ட குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். அலுவல் தேவைகளுக்கு ஏற்ப, இந்த அமர்வு, 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் 23 ஆம் தேதி, வியாழன் அன்று முடிவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பல்வேறு நிலுவைத் தொகைகளை, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு பிரச்சினைகளை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
Source: PTI, New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.