Aran Sei

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மோடி அரசாங்கம் – 7 புகார்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று முழுதாக ஏழு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், 7 புகார்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் கிடைத்த பொருளாதார ஆதாயங்களை மாற்றியமைத்தது, விவசாயிகளிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து வருவது, கொரோனா தொற்றை திறமையற்ற முறையில் கையாண்டது, சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாட்டைப் பாதுகாக்கத் தவறியது ஆகியன பாஜக அரசின் தவறுகளாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

‘தடுப்பூசி போட விதிகளை மீறும் தனியார் மருத்துமனைகள்’: நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்

சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளில், இந்தியா மக்கள் கொண்டிருக்கும் பலவீனமாக அரசு மோடி அரசு தான் என காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தகவல் தொடர்புத் துறையின் பொறுப்பாளருமான ரந்தீப் சுர்ஜிவாலா காணோளி காட்சி வாயிலாக நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014 ஆம் ஆட்சியை விட்டு விலகியபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 விழுக்காடாக இருந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு முன்பான 2019-2020 ஆம் நிதியாண்டில் 4.2 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. ”2020 – 21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 24.1 விழுக்காடாகவும், இரண்டாம் காலாண்டில் 7.5 விழுக்காடாகவும் இருந்துள்ளது. 2020 -21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மைனஸ் 8 விழுக்காடுக்கு நெருக்கமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மாநிலங்களுக்குள் பாகுபாடு காட்டும் பாஜக’: கூட்டாட்சிக் கொள்கை பாதிக்குமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

”ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக உறுதியளித்த பாஜக அரசு, 7 ஆண்டுகளில் 14  கோடி வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு பதிலாக, 45 ஆண்டு கால அளவில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள்மீதான உணர்ச்சியற்ற அணுகுமுறைக்கு அரசாங்கத்தை விமர்சித்துள்ள ரந்தீப் சுர்ஜிவாலா, சிறு விவசாயிகளை அழித்துப் பெரிய நிறுவனங்களை வளர்க்க பாஜக அரசு விரும்புகிறது. சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவதாக அளித்த வாக்குறுதியைத் திரும்பப் பெறுள்ளதையும் விமர்சித்துள்ளார்.

‘கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கொட்டப்பட்டதால் கங்கை நீர் அசுத்தமாகவில்லை’ – ஒன்றிய அரசு தகவல்

இந்த அரசு வறுமைக்கு எதிரானது அல்ல, ஏழைகளுக்கு எதிரானவர்கள்” என்ற உலக வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய ரந்தீப், ஐ.மு.கூ ஆட்சியில் 27 கோடி பேர் கடுமையான வறுமையை சமாளித்தனர். ஆனால், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடுத்தர வர்கத்தினர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 3.20 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குறிப்பிட்டார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்