இன்று (மே 28) நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குமாறு பாஜக ஆட்சி நடைபெறாத ஏழு மாநில அரசுகள் ஒருமனதாக, ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளன.
தற்போது, அவற்றுக்கு 5 தொடங்கி 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (மே 27), தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதியமைச்சர்களுடனான இணையவழிக் கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் சாந்தி தரிவால், “கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களின் மீதான வரியை முற்றிலுமாக ஒன்றிய அரசு நீக்க வேண்டும். அதனால், உள்ளீட்டு கடனில் இழப்பு ஏற்படாது. மேலும், நுகர்வோருக்கும் நிவாரணம் கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை முன்கூட்டியே அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க ஏழு மாநில அரசுகளும் கோரியுள்ளன. இக்கோரிக்கைகள் இன்று (மே 28) நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்படவுள்ளன.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.