ஜிஎஸ்டி சட்ட விதிகளால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக ஈடுசெய்ய வேண்டும் என காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் ஏழு மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
கூடுதல் கடன் வரம்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.
மே 28 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்திற்கு முன்பாக ராஜஸ்தான் நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் சாந்தி தாரிவால், நடத்திய காணோளி கூட்டத்தில் இந்தக் கேள்விகள் எழுப்பட்டன. கொரோனா எதிர்ப்பு பணிக்காக வாங்கப்பட்ட பொருட்கள்மீதான அனைத்து வரியையும் ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிட்ட ஊடகவியலாளர் – கைது செய்த உத்தர பிரதேச காவல்துறை
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ராஜஸ்தான் அரசு சார்பில் கலந்து கொள்ளவிருக்கும் தாரிவால், ”அனைத்து மாநில நிதியமைச்சர்களும் இந்தப் பிரச்னையில் ‘ஒற்றுமையாக’ இருப்பார்கள் என்றும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் திறம்பட எழுப்புவார்கள்” என்றும் கூறியுள்ளார்.
”ஒன்றிய அரசு கூட்டுறவு கூட்டாட்சி தத்துவதிற்கு மதிப்பளித்து, ஜிஎஸ் வருவாய் இழப்புகளைத் தாமதமின்றி வழங்கிட வேண்டும்” என தாரிவால் கோரினார். கொரோனாவால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க இது உதவும் என கூறிய அவர், 2022 ஆம் ஆண்டிற்கு பிறகான ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கும் முறையை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவுகளை நீக்க உத்தரவிட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ மனு – தகவலைத் தரமறுத்த ஒன்றிய அரசு
மேற்குவங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, பஞ்சாப் நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல், ஜார்கண்ட் நிதியமைச்சர் ரமேஷ்வர் ஓரான், சத்தீஸ்கர் நிதியமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.