Aran Sei

கட்சி தாவும் ஜனதா தள எம்எல்ஏ கள் – அருணாச்சல பிரதேசத்தில் பலமாகும் பாஜக

Image Credits: DNA India

க்கிய ஜனதா தளத்தில் இருந்து ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும், அருணாச்சல் மக்கள் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் கடந்த இரண்டு நாட்களில் கட்சி மாறியதால், அருணாச்சல பிரதேசத்தில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. இதனால் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 48 உறுப்பினர்கள் கிடைத்துள்ளது.

2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தது. ஐக்கிய ஜனதா தளம் அதற்கு அடுத்தபடியாக இருந்தது. இப்போது, ஐக்கிய ஜனதா தளத்தில் டெச்சி காசோ மட்டுமே தனி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு

இதுகுறித்துப் பேசிய அம்மாநில பாஜக தலைவர் பியூரம் வாகே “கட்சியில் சேர அவர்களித்த விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு இது. முதலமைச்சர் பெமா காண்டுவின் ஆட்சியின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர் அருணாச்சல பிரதேசை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றுள்ளார்” என்று  தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

ரும்காங் தொகுதியைச் சேர்ந்த தாலேம் தபோ, சயாங் தாஜோவைச் சேர்ந்த ஹயெங் மங்பி, தாலியைச் சேர்ந்த ஜிகே டகோ, கலக்டாங்கிலிருந்து டோர்ஜி வாங்டி கர்மா, போம்டிலாவைச் சேர்ந்த டோங்ரு சியோங்ஜு மற்றும் மரியாங்-கெகு தொகுதியைச் சேர்ந்த காங்கொங் டாகு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிப் பாஜகவுடன் இனைய உள்ளனர்.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?

லிகாபலி தொகுதியைச் சேர்ந்த கர்தோ நைகியோர் அருணாச்சல் மக்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி அக்கட்சி சில நாட்களுக்கு முன்பு அவரை இடைநீக்கம் செய்தது.

2019-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் பாஜக 41 இடங்களை வென்றது. காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன மற்றும் மூன்று சுயேச்சைகளும் உள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்