பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையின்போது தன்னை இழிவுபடுத்தும் விதமாக விசாரணையில் ஈடுபட்ட நீதிபதி சிரித்ததாக, பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி பாலியல்வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹிரேமத் என்பவர் தாக்கல் செய்தி முன்ஜாமீன் மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கங்னாவால், குற்றம்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீனை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தகாத வார்த்தைகளால் கேலிக்குரிய விதமாகக் கேள்வி கேட்டதாகவும், அதற்கு நீதிபதி சிரித்தாகவும் குறிப்பிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது – ஆய்வு
அந்தக் கடிதத்தில் , “வழக்கின் விசாரணையின்போது தன்னை இழிவுபடுத்தும் விதமாகக் கேள்வி கேட்கப்பட்டதை கண்டிக்காமல் நீதிபதி சிரித்தது, உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதலை மீறுவதாகும்” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதி சஞ்சய் கங்னாவால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்தப் பெண் வேண்டுகோள்விடுத்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.