Aran Sei

உலகிலேயே அதிக விலையில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் இந்தியா – முதலாளிகளின் நலன் காக்கிறதா மத்திய அரசு?

கோவிட்ஷீல்டின் தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ. 600 ஆக நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, உலகிலேயே இந்தியாவில் தான் அதிக விலைக்கு விற்கப்பட இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மே  1 ஆம் தேதி முதல் தடுப்பூசி தயாரிப்பின் 50 விழுக்காட்டை நேரடியாக மாநில அரசுகளுக்கு வெளி சந்தைகளுக்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து, கோவிட்ஷீல்ட் தடுப்பூசிக்கான விலையை மாநில அரசுக்கு ரூ. 400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிர்ணயித்துள்ளது.

மத்திய அரசுக்கு விற்கப்படும் 150 ரூபாய் விலைலேயே லாபம் கிடைப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

”மத்திய அரசுக்கு முதல் 10 கோடி டோஸ்களுக்கு மட்டுமே ரூ.200 விலை நிர்ணயிக்கப்பட்டது… அதன்பிறகு வெளிசந்தைகளில் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டும் ”என பூனாவாலா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2 அமெரிக்க டாலர் முதல் 5.25 அமெரிக்க டாலர்கள் வரை கோவிட்ஷீல்ட் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 600 ரூபாய் (தோராயமாக 8 அமெரிக்க டாலர்கள்) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

”மத்திய அரசு வழங்கியிருக்கும் 3 ஆயிரம் கோடி ரூபாயில், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டதை போல 11 கோடி டோஸ்கள் 150 ரூபாய் விலையில் வழங்கப்படும். மீதமிருக்கும் 1350 கோடி ரூபாய்க்கு 3.5 கோடி டோஸ்கள் ரூ 400 என்ற விலையில் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என பூனாவாலா தெரிவித்துள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்ஷீல்ட் தடுப்பூசிகள் விலை 400 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் பதிலளிக்கவில்லை என தி  இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்