ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை முன்னெடுத்தவரும், அப்பகுதி உரிமைகளுக்காகப் போராடியவருமான சையது அலி ஷா கிலானி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
சையது அலி ஷா கிலானி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபோர் சட்டமன்ற பகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008 ஆம் ஆண்டு அமர்நாத் நிலத்தகராறு பிரச்சனை மற்றும் 2௦1௦ ஆம் ஆண்டு இளைஞர் கொல்லப்பட்டது குறித்தானப் போராட்டங்களுக்குப் பிறகு அவர் வெளியுலகிற்கு தெரியவரத்தொடங்கியது.
இவர் ஹுரியத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். இவர் கடந்த 11 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மெஹ்பூபா முக்தி, “நாங்கள் பெரும்பாலான விஷயங்களில் உடன்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவரது உறுதியுடனும், அவரது நம்பிக்கையின் அடிப்படையிலும் நான் அவரை மதிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது ட்விட்டர் பக்கத்தின் வழியாகத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
source: தி வயர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.